முதலாவது கொரோனா மரணம் திருகோணமலையில் பதிவானது!

 


திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று காலை மாவட்டத்தின் முதலாவது கொரோனா மரணம் இடம்பெற்றுள்ளது. இதனை கிண்ணியா தள வைத்தியசாலை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


குறித்த நபர் கிண்ணியா அடப்பனார் வயல் பிரதேசத்தை சேர்ந்த 79 வயது ஆண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2021.02.19ம் திகதி தனியார் வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக சென்ற நிலையில் குறித்த வைத்தியசாலையின் மருத்துவர் ஒருவரால் அரச வைத்தியசாலைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க பரிந்துறை செய்யப்பட்டிருந்தது.


அதனடிப்படையில் நீரழிவு, இதயநோய் அதிகரித்த நிலையில் நேற்று அவருக்கு செய்யப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொவிட்19 உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த நோயாளி இன்று காலை 7.45 மணியளவில் மரணத்தை தழுவியதாக மரணித்த நபரின் உடல் இன்று பி.ப 1.30 மணியளவில் திருகோணமலை மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.