மலேசியாவில் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி!!
மலேசியாவில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் போது, முதல் நபராக தடுப்பூசி செலுத்திக் கொண்டு, பிரதமர் முஹைதீன் யாசின் இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
இதன்போது கருத்து தெரிவித்தா பிரதமர் முஹைதீன் யாசின், ‘கொரோனா தடுப்பூசியை நான் செலுத்திக் கொண்ட பிறகு, எனக்கு எந்த வித்தியாசமான உணர்வும் ஏற்படவில்லை. இது, மற்ற ஊசிகளைப் போல சாதாரணமானதுதான். எனவே, யாரும் அச்சப்படாமல் இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முன்வரலாம்’ என கூறினார்.
பிரதமரைத் தொடர்ந்து காதாரத் துறை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா உட்பட பலர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
ஃபைஸர் மற்றும் அஸ்ட்ராஸெனகா நிறுவனத்திடமிருந்து கொரோனா தடுப்பூசிகளை வாங்கி வரும் மலேசியா, அடுத்த ஆண்டுக்குள் 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசியைச் செலுத்த திட்டமிட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை