கடற்படை வீரர் ஒருவர் விபத்தில் பலி!!
புத்தளம் நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து பாலாவி சிமெந்து தொழிற்சாலைக்கு பொலித்தீன் கழிவுகளை ஏற்றிச் சென்ற கனரக லொறியுடன் புத்தளம் தம்பபண்ணி கடற்படை முகாமிலிருந்து கொழும்பு சென்ற கடற்படை வீரர் ஒருவர் மோதி விபத்துக்குள்ளாகி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ள நிலையில் வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த கடற்படை வீரர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரென பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை