வைரலாகும் ஹர்பஜன்சிங், சதீஷின் காமெடி டுவிட்டுக்கள்!!

 


பிரபல கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஹர்பஜன்சிங் அவ்வப்போது தமிழில் டுவிட் செய்து தமிழர்களை குஷிப்படுத்துவார் என்பது தெரிந்ததே. தற்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இல்லை என்றாலும் தொடர்ந்து அவர் தமிழில் ட்வீட் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


அந்தவகையில் தற்போது ’பிரண்ட்ஷிப்’ என்ற தமிழ் திரைப்படத்தில் ஹர்பஜன்சிங் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் ஹர்பஜன்சிங் உடன் அர்ஜூன், சதீஷ், லாஸ்லியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் நடிகர் சதீஷ் கடந்த சில மணி நேரம் முன்பு தனது டுவிட்டரில் ’பிரண்ட்ஷிப்’ படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து அதில் ’என்றும் தொடரும் இந்த பிரண்ட்ஷிப் என்றும் பதிவு செய்தோடு ’லவ் யூ ஹர்பஜன், லவ் யூ லாஸ்லியா என்றும் பதிவு செய்தார்.

சதீஷின் இந்த டுவிட்டுக்கு பதிலளித்த ஹர்பஜன், ‘மச்சி என்ன இப்பிடி பச்சயா பொய் சொல்ற நீ லாஸ்லியாவை தான லவ் பன்றேன்னு சொன்ன.. அண்ணிக்கு இந்த விஷயம் தெரியுமா?? நம் நட்பு என்றும் தொடரும் தோழா’ என்று கூறியுள்ளார். இதற்கு கமெண்ட் அளித்த சதீஷ், ‘அய்யய்யோ எனக்கே இந்த விஷயம் இப்பதான தெரியும், லாஸ்லியாவை ஒரு தோழியாக லவ் யூ என்று தான் சொன்னேன்’ என்று காமெடியாக பதிவு செய்துள்ளார்.


ஹர்பஜன்சிங், சதீஷின் இந்த காமெடி டுவிட்டுக்கள் தற்போது வைரலாகி வருகிறது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.