தேனில் ஊறவைத்த பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!

 


தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் எண்ணற்ற வியாதிலிருந்து விடுபடுவதோடு பல நன்மைகளையும் பெற முடியும்.


தேவையான அளவு பூண்டு எடுத்து நன்றாக தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். கண்ணாடி பாட்டிலில் அதனைப் போட்டு பூண்டு மூழுகும் அளவுக்கு தேன் ஊற்றவேண்டும். குறைந்தது ஒரு நாள் முழுவதுமாவது பூண்டு தேனில் ஊறவேண்டும். இதற்கு கெமிக்கல் கலப்படமில்லாத தூய தேன் வாங்குவது சிறந்தது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தாலே போதுமானது. ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து ஆறு முறை இதை அரை ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிடலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் தான் பலன் அதிகம்.


பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்று நோய்கள், காயங்கள் போன்றவற்றை தவிர்க்க முடியும். பூண்டு இன்ஸுலின் சுரப்பை அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.

பூண்டில் 'அலிசின்' என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதில் பூண்டு முதன்மையானது. தேன் மற்றும் பூண்டு இரண்டிலுமே கொழுப்பை கரைக்ககூடிய ஆற்றல் இருக்கிறது. இவற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் அதில் இருக்கும் என்சைம்கள் நம் உடலுக்குள்ளும் சென்று கொழுப்பை கரைத்திடும்.

உடலில் போதுமான ரத்த அளவு இல்லாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே விளங்குகிறது. தேன் ரத்தம் விருத்தியடையச் செய்கிறது. தினமும் வெறும் வயிற்றில் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். சிலருக்கு உடல் வறட்சியாலோ அதிக சூட்டினாலோ இருமல் வரும். அவர்கள் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைத்திடும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.