இலங்கையில் SARS B 142 வைரஸ்!


 இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வைரஸ் மிகவும் ஆபத்தானது என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாதாரண இருமல் மூலம் பல பில்லியன் அளவு வைரஸ் பரவு கூடும். புதிய வைரஸ் SARS B 142 வைரஸாக அடையாளம் காணப்பட்டுள்ளது. குழந்தைககள் மற்றும் வயோதிபர்களுக்கே அதிக ஆபத்துக்கள் உள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவிட் வைரஸின் பதிய மாறுபாடு முன்பு பரவியதனை விடவும் ஆபத்தானதென சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வைரஸின் புதிய மாறுபாடு SARS இன் துணைக்குழுவான B142 என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க ரெிவித்துள்ளார்.

இந்த வைரஸ் ஒரு நபரிடம் இருந்து மற்றுமொருவருக்கு மிகவும் வேகமாக பரவக்கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானதென நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். குழந்தைகள், சிறுவர்கள்ள மற்றும் வயோதிபர்களுக்கு இந்த வைரஸ் பரவும் ஆபத்து அதிகமாக உள்ளது.

புற்றுநோய் உட்பட பல்வேறு நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு இந்த வைரஸ் தொற்றுடன் போராட குறைந்த அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியே உள்ளது.

தும்மலினாலேயே பல அடி தூரத்திற்கு வைரஸ் பரவும் ஆபத்துக்கள் உள்ளது. இதனால் நாடு முழுவதும் புதிய வைரஸ் பரவும் ஆபத்துக்கள் உள்ளமையினால் நகரங்களை விட்டு வெளியே பயணிப்பதனை தவிர்ப்பது நல்லது. வயோதிபர்கள் வீதிகளிலேயே தங்கியிருப்பது நல்லது.

ஏனையவர்களும் அச்சியாவசிய விடயங்களுக்கு மாத்திரம் வீட்டை விட்டு வெளியே வருமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.