போராட்டம் என்பது மக்களுக்கானது. அரசியலுக்கானது இல்லை.!

 


கிழக்கில் எழுகதமிழ் நடைபெற்று இன்றோடு நான்கு வருடங்கள். பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்டு பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி முன்வைத்த அதே கோரிக்கையை தான் முன்வைத்தார்கள்.
எண்ணிக்கையில் அதிகம் இருந்தாலும், எழுக தமிழில் கலந்துகொண்ட மக்கள் தான் P2P பேரணியிலும் கலந்துகொண்டார்கள். அரசியல் வாதிகளே போராட்டங்களை கட்சி ரீதியாக பார்க்கின்றனர். மக்கள் அவ்வாறு இல்லை.
பொங்கு தமிழுக்காகவும் போராடினார்கள்.
எழுக தமிழுக்காகவும் போராடினார்கள்.
வித்தியாவின் நீதிக்காகவும் போராடினார்கள்.
யாழ்.பல்கலைக்கழகத்துக்காகவும் போராடினார்கள்.
P2P க்காகவும் போராடினார்கள்.
இனியும் போராடுவார்கள்.
போராட்டம் என்பது மக்களுக்கானது. அரசியலுக்கானது இல்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.