சுவிற்சர்லாந்து தூதுவருக்கும் கூட்டமைப்புக்குமிடையில் சந்திப்பு!

 


இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்மிடையிலான சந்திப்பொன்று நே்றறையதினம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ,வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனா்.

இக்கலந்துரையாடலின் போது ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பிலே உலக நாடுகளின் நிலைப்பாடுகள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சந்திப்பின் பின்னரான ஊடகசந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் தொிவிதுளஹளனாஹஃ

.அத்துடன் 30/1, 34/1, 40/1 தீர்மானங்களுக்கு மேலதிகமாக தற்பொழுது வரப்படப்போகின்ற தீர்மானம் இலங்கைக்கு என்ன அழுத்தங்களைக் கொடுக்கும் என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் தொல்பொருள் திணைக்களம், வனவள திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தொிவித்துள்ளனா்.

அத்துடன் சிறையிலுள்ள அரசியல் கைதிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள எமது தமிழ் மக்களை உடனே திருப்பி அனுப்ப கூடாது என்பதற்கான எழுத்து மூல கடிதத்தினை தாங்கள் சுவீஸ் தூதுவரிடம் கையளித்துள்ளதாகவும் அவா்கள் தொிவித்துள்ளனா்.

இதனை அவர் ஏற்றுக்கொண்ட அவா் தாம் கடந்த ஒன்றரை வருடங்களாக தமிழ் மக்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையினை கையாளவில்லை என தொிவித்ததாதகவும் தப்போதும் அவ்வாறான எண்ணம் தமக்கு இல்லை எனக் குறிப்பிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் தொிவித்துள்ளனா்.

 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.