தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்.!📸


 2009 இல் உலக பயங்கரவாத அரசுகள் ஒன்றிணைந்து அழித்தது ஒரு இனக் குழுமத்தை மட்டுமல்ல, அவர்கள் உருவாக்கி நடைமுறையில் நடத்திக் கொண்டிருந்த ஒரு அரசையும்தான்.

அதன் ஒரு சாட்சியம் / இன்னொரு பாய்ச்சல்தான் இந்த தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்.
தம்மையும் மீறி ஒரு அரசு உருவாகிறது என்பதற்கும் அப்பால் / அது தனது சொந்தப் பலத்துடன் / சுய சிந்தனைகள் வழியே உருவாகி வருவதை இந்தப் பயங்கரவாத அரசுகளால் ஜீரணிக்கவே முடியவில்லை.

விளைவு பல கபட நோக்கங்களுடன் தமிழின அழிப்புக்கு துணை போனார்கள்.
ஆனால் இறுதி வரை அவர்களால் புலிகளை மண்டியிட வைக்க முடியவில்லை.
பேச்சுக்கள் வழியே நடைமுறை அரசை நீர்த்துப் போக வைக்க முயன்றார்கள். முடியாத போது படைத்துறை ரீதியாக நெருக்குதலைக் கொடுத்து அடிபணிய வைப்பதனூடாக இப்படியான ஒரு சுய அரசு சாத்தியமில்லை என்பதை ஒரு கோட்பாடாக நிறுவ முயன்றார்கள்.

ஆனால் புலிகள் அதை உணர்ந்து போராடும் இனங்களுக்கு மோசமான முன்னுதாரணத்தை விட்டு விடக் கூடாதென்பதற்காகவும் / இந்தக் கோட்பாட்டை தகர்க்க வேணும் என்பதற்காகவும் இறுதிவரை மண்டியிடாது போரிட்டு வீழ்ந்தார்கள்.
இதுதான் நந்திக்கடல் கோட்பாடுகளின் மையம்.
போராடுவதற்கு வெளிச் சக்திகளை நம்பி இருக்காதது போல் தலைவர் தமிழீழ அரசுக்கான ஒவ்வொரு கட்டமைப்பைக்கும் வெளியிலிருந்து துறைசார் தமிழ்ப் புலமையாளர்களை அழைத்து கட்டமைப்புக்களை உருவாக்கினார்.
அதில் இந்த காலநிலை அவதானிப்பு நிலையமும் ஒன்று.
இது குறித்த மேலதிகக் கற்கை நெறிகளுக்காக இருபதிற்கும் மேற்பட்ட போராளிகள் வெளியில் வந்தனர்.
வானிலை/ வானவியல்/ செய்மதித் தொழில்நுட்பம் குறித்தும் ஆய்வுகள் நடந்தன.
தலைவர் ஒரு கட்டமைப்பை அதனோடு மட்டும் சுருக்குபவர் அல்ல, அதுபோல இதையும் படைத்துறை/ புலனாய்வு தேவைகளுக்காகவும் விரிவாக்கம் செய்யும் முனைப்பில் இருந்தது பின்னர் அறியக் கிடைத்தது.
இஸ்ரேல் உருவாக்கத்தில் யூதர்கள் சிந்தித்ததற்கு ஒரு படி மேலே போய் தலைவர் சிந்தித்ததற்கான சான்று இது.
இதுதான் மறுவளமாக புலிகளை என்ன விலை கொடுத்தாவது அழித்து விட வேண்டும் என்ற பிராந்திய / உலகளாவிய சதிக் கூட்டணிகளின் உந்துதலுக்குக் காரணமாக அமைந்தது.
2009 இல் அழிக்கப்பட்டது ஒரு இயக்கம் அல்ல / மக்களும் அல்ல/ அது ஒரு அரசு.
இதை நம்மவர் பலரே எதிரிகளின் நிகழ்ச்சி நிரல் பிரகாரம் மறந்து போனது பெரும் துயரம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.