டாம் வீதியில் பெண்ணின் தலை துண்டாக்கப்பட்ட சடலம்!

 


கொழும்பில் நேற்று பயணப் பையில் தலை துண்டிக்கப்பட்ட யுவதியொருவரின் சடலம் புறக்கோட்டை – டாம் வீதியில் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக எவ்வாறு கொண்டுவரப்பட்டது தொடர்பிலான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இல - 143 பாதையில் இயங்கும் ஹங்வெல - புறக்கோட்டை பேருந்தில் சந்தேகநபர் ஒருவர் குறித்த சடலத்தை எடுத்து வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பெச்சாளர், பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சுமார் 20 வயது மதிக்கத்தக்க யுவதியொருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் டாம் வீதியூடாக பயணப் பையை தள்ளிக்கொண்டு வருவதை சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகி உள்ளது.

அதன்படி, அவர் பயணித்த இல - 143 பாதையில் இயங்கும் பஸ் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரித்தபோது, சந்தேகநபர் ஹங்வெல பகுதியில் இருந்து ஒரு பயணப்பொதியுடன் ஏறியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அந்த சடலத்திற்கு இன்று பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பையை கொண்டு செல்லும் நபரின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியிடப்பட்டன.

அவர் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால், 0718 591 557 அல்லது அவசர இலக்கம் 0112 433 333 என்ற எண்ணுக்கு தெரிவிக்குமாறு பொலிஸார் கோருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.