நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் விபரம் !

 


இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மாத்திரம் 350 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதிகளவில் அதாவது 94 பேர் கொழும்பு மாவட்டத்திலும் இரத்தினபுரியில் 82 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பதுளையில் 31 பேரும் அனுராதபுரத்தில் 17 பேரும் கம்பஹாவில் 14 பேரும் கேகாலையில் 13 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை மன்னர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய தலா 12 பேருக்கும் காலி, நுவரெலியா மற்றும் பொலன்னறுவையில் தலா 11 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

அத்தோடு கழுத்துறையில் 09 பேருக்கும் 08 யாழ்ப்பாணத்தில் 08 பேருக்கும் திருகோணமலை மற்றும் கண்டியில் தலா 06 பேருக்கும் மாத்தறையில் 04 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 84 ஆயிரத்து 960ஆக உயர்ந்துள்ளது.

இதில் 81 ஆயிரத்து 321 பேர் குணமடைந்துள்ளதுடன் 3 ஆயிரத்து 146 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 493 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.