கொழும்பு- பதுளை பிரதான வீதியில் விபத்து!

 


கொழும்பு- பதுளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) காலை, பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, எல்ல- ஹல்பே பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள், தெமோதரை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.