இலங்கை தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள அறிவித்தல்!

 


கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையம் குறித்த இலங்கையின் முன்மொழிவுக்கு இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒப்புதல் அளித்துள்ளது என்ற இலங்கை அரசாங்கத்தின் கூற்று ‘உண்மையில் தவறானது’ என்று இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை 35 ஆண்டுகளில் உருவாக்கி இயக்க அதானி குழுவுடன் ஒரு கூட்டு முயற்சியை கடந்த செவ்வாயன்று கொழும்பு ஒப்புதல் அளித்தது.

அதுமாத்திரமன்றி இந்த திட்டத்திற்கு முதலீட்டாளர்களை பரிந்துரைக்க அமைச்சரவை நியமித்த பேச்சுவார்த்தைக் குழு இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் ஜப்பானிய தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் "அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட்" முன்வைத்த இந்த திட்டத்திற்கு இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒப்புதல் அளித்துள்ளது" என்று இலங்கையின் அரசாங்க தகவல் துறை தமது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது குறித்து நேற்று இந்தியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, இலங்கை அரசாங்கம் இந்த திட்டத்தில் நேரடி முதலீட்டை மேற்கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கொழும்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் இலங்கை அரசாங்கத்தின் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியதாக வெளியான அறிக்கை உண்மையில் தவறானது என்று ஸ்ரீவஸ்தவா சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.