பொலிஸார் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!


யுவதியை கொலை செய்து கொழும்பு டாம் வீதியில் பையொன்றில் தலையில்லா உடலை வைத்துச் சென்ற நிலையில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரி பிரேமசிறியின் உடலுக்கு மரியாதை செலுத்தவேண்டாமென முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன் அவரது உடலுக்கு பொலிஸ் சீருடையை அணிய வேண்டாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் அதிகாரியொருவர் சம்பவமொன்றில் சந்தேகநபராக இருக்கும் போது இறந்துவிட்டால் அவ்லது தற்கொலை செய்து கொண்டால் பெண்ணோ அல்லது ஆணோ பொலிஸாரால் கௌரவிக்கப்படமாட்டார்கள் அல்லது பொலிஸ் சீருடை அணிவிக்கப்படுவதில்லை என அவர் தெரிவித்தார்.

யுவதியைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சப் இன்ஸ்பெக்டரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த எந்த பொலிஸ் அதிகாரியும் வரமாட்டார் என்று மொனராகலவில் உள்ள ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

யுவதியைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட சப் இன்ஸ்பெக்டர் ஏ.எச். பிரேமசிறியின் (52) சடலம் தற்போது மொனராகலா மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேமசிறியின் உடல் பி.சி.ஆருக்கு கொண்டு செல்லப்பட்டது. விசாரணை அறிக்கை வரும் வரை சடலம் பிரேத அறையில் வைக்கப்படும்.

தற்கொலை செய்து கொண்ட சப் இன்ஸ்பெக்டரின் உடலை அவரது மனைவி ஏற்க விருப்பம் தெரிவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பி.சி.ஆர் பரிசோதனையில் அவர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தால், உடல் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படாது, தனிமைப்படுத்தப்பட்ட விதிகளின் கீழ் இறுதிக்கிரியை மேற்கொள்ளப்படும் என்று மூத்த பொலிஸ் அதிகாரி கூறினார்.

ஊவா மற்றும் கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரொஷான் பெர்னாண்டோவின் மேற்பார்வையில் மொனராகலா பிரிவுக்கு பொறுப்பான எஸ்.எஸ்.பி சிசில குமாராவின் சிறப்பு அறிவுறுத்தல்களில் படல் கும்புர ஓ.ஐ.சி தலைமை ஆய்வாளர் சுனில் சாந்தா மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.