ஒருநாள் தொடரை தவறவிடும் கேன் வில்லியம்சன்!

 பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை, நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் தவறவிடுவார் என அணியின் மருத்துவ மேலாளர் டேல் ஷாகெல் உறுதிப்படுத்தியுள்ளார்.

இடது முழங்கையில் ஏற்பட்ட காயத்தினால் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென்ற கட்டயாத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நியூசிலாந்தின் அனைத்து வடிவ அணித்தலைவரான கேன், கோடையின் இரண்டாம் பாதியில், இடது முழங்கை தசைநார் பகுதியில் வலி எரிச்சலை அனுபவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை, இதன் காரணமாக அவருக்கு ஓய்வு கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் கேன் வில்லியம்சனின் பங்களிப்பு இன்றியமையாது என்பதை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சரியாக ஒரு மாத காலப்பகுதியில் ஆரம்பமாகும், ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்காக வில்லியம்சன் விளையாடுவதும் தற்போது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி-20 தொடர்களில் விளையாட இம்மாத நடுப்பகுதியில் பங்களாதேஷ், நியூசிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதில் முதலில் நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 20ஆம் திகதி டுனெடினில் நடைபெறவுள்ளது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.