கிளிநொச்சியில் பெண்ணொருவர் சடலமாக கண்டெடுப்பு!

 கிளிநொச்சி அப்பாள் குளம் பகுதியில் இன்று(செவ்வாய்கிழமை) பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் 30 வயது மதிக்க தக்கவர் என்பதுடன், பாதணிகள், கைப்பை ஆகியனவும் சடலத்துடன் காணப்படுகின்றதோடு குளக்கட்டினை அண்மித்து ஒதுங்கியுள்ள சடலம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் ஆரம்பித்துள்ளனர். சடலத்தை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டதன் பின்னர் மரண விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.