ஜனாதிபதியிடம் கோரிக்கை விடும் சஜித் அணி!

 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க மீதான தண்டனையை குறைக்குமாறும் அல்லது பொதுமன்னிப்பு ஒன்றை வழங்குமாறும் ஜனாதிபதியிடம் தாம் தனிப்பட்ட முறையில் இக்கோரிக்கையை முன்வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ( செவ்வாய்க்கிழமை ) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதச் சம்பளத்தை நிறுத்தும்படியான தீர்மானத்தை நேற்று நாடாளுமன்ற விவகார செயலகம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.