சிரியா ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

 சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அசாத் மற்றும் அவரது மனைவி கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

55 வயதான ஜனாதிபதி அசாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா இருவரும் ‘நல்ல உடல்நலம் மற்றும் நிலையான நிலையில்’ இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அசாத்தின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா வைரஸுடன் சிறிய அறிகுறிகளை உணர்ந்த பின்னர் தம்பதியினர் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொண்டனர்.

இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை வீட்டில் தனிமையில் இருந்து குணமடைந்த பிறகு பணிக்கு திரும்புவார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட சிரியா பெப்ரவரி நடுப்பகுதியில் இருந்து கொவிட்-19 நோய்த்தொற்றுகளில் கூர்மையான உயர்வைக் கண்டது.

ஆனால் நாட்டின் மோசமான பொருளாதார நிலைமை காரணமாக முடக்கநிலை கட்டுப்பாடுகள் பெரிதாக அமுல்படுத்தப்படவில்லை.

அல்- அசாத்தின் அரசாங்கம், கடந்த மார்ச் 1ஆம் திகதி முதல் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்கத் தொடங்கியது.

அடுத்த வாரம் 10 ஆண்டுகால யுத்தத்தை குறிக்கும் சிரியாவில், கிட்டத்தட்ட 16,000 கொவிட்-19 தொற்றுகளும், வைரஸால் 1,000க்கும் மேற்பட்ட இறப்புகளும் பதிவாகியுள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், அரசாங்கத்தின் வரையறுக்கப்பட்ட சோதனை திறன் காரணமாக உண்மையான எண்கள் மிக அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.