பட்டினியோடு பத்தாவது நாள் !!


தமிழினத்தின் நீதிக்காக தன்னை உருக்கும் தியாகம் திருமதி அம்பிழகை செல்வக்குமார் உண்ண மறுத்து இன்றுடன் 10 ஆவது நாளை எட்டியுள்ளது. மனித உரிமையை உலகிற்கு அறிமுகம் செய்த பிரித்தானியா தன் நாட்டிலேயே கண்முன்னே மனிதம் செத்துக்கொண்டிருப்பதை கண்டு மௌனம் காத்து வருகின்றது. 


இனப்படுகொலையாளர்களை காப்பாற்ற சர்வதேச விசாரணையை நிராகரித்து தொடர்ந்தும் இன அழிப்பை மேற்கொண்டு வரும் இலங்கை அரசிற்கு, மேலும் இன்னுமொரு கால அவகாசத்தை வழங்குவதை சர்வதேச நாடுகள் நிறுத்துவதோடு, இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி தமிழர்களுக்கான நீதியை  பெற்றுத்தரும்படி ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றைக்குராலாய் பசித்திருந்து  நீரை மட்டும் அருந்தி நீதிக்காய் போராடும் அம்பிகையின் அறப்போர் இன்று 10 ஆவது நாளை எட்டியுள்ளது.


உண்ணாமல் இரு வாராங்களை அண்மித்துக்கொண்டிருக்கும் அம்பிகையின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது என மருத்துவர்கள் அறிவித்துள்ள போதிலும் கோரிக்கை நிறைவேறும்வரை தனது போராட்டத்தில் உறுதியாக இருக்கும் அவர் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அகிம்சை வழியில் உயிர் தியாகிகளான திலீபன், அன்னை பூபதி ஆகியோரை வணங்கி அவர் இன்றைய 10 ஆவது நாளினை தொடர்ந்துள்ளார். 


இந்நிலையில் வழமை போன்று இன்றும் பிரித்தானியாவின் மௌனம் கலைக்கவும் உலக நாடுகள் அம்பிகையின் போராட்டத்திற்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டியும்  அம்பிகை ஆதரவு குரல் மெய்நிகர் நிகழ்விவு பிரித்தானிய நேரம் பி.ப.3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 


மகளிர் தினத்தை முன்னிலைப்படுத்தி இன்று நடைபெறவுள்ள மேற்படி மெய்நிகர் நிகழ்வில் வணக்கத்துக்குரிய  ஸ்ரீமதி. ஸ்ரீகமலேஸ்வரி சசிகுமாரக்குருக்கள், அருட்சகோதரி ரேகா வலிசாயி, ஜொலினிராஜி ஸ்ரான்லி ஆகிய மதத்த தலைவிகளின் ஆசிச்செய்திகளும் திருமதி நாகேஸ் நரேந்திரா (கவுண்சிலர், லேபர் கட்சி, கரோ, இலண்டன்) 

Margret Own (OBE Senior Barriester, Women for Peace Through Democracy WPD அமைப்பின் தலைவி, ஆசிரியர் சபரிமாலா

(தலைசிறந்த பட்டிமன்ற நடுவர், சமூக தலைவர்- பெண் விடுதலை கட்சி, இந்தியா), கொளரவ  திருமதி. அனந்தி சிறிதரன் (முன்னாள் அமைச்சர், வட மாகாணசபை, இலங்கை),  திருமதி. லீலாவதி ஆனந்தராஜா (வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர்) ஆகியோரன் சிறப்புரைகளும் திருமதி விழியரசியின் பேச்சும் மருத்துவர் அமுதநிலா காசி ஆனந்தனின் (அவுஸ்ரேலியா) சிறப்பு நடனமும்  (கவி வரிகள்: கவிஞர் காசி ஆனந்தன், பாடகர்: புஸ்பவனம் குப்புசாமி) இடம்பெறவுள்ளன


இதேவேளை நேற்றைய 9 ஆவது நாள் மெய் நிகர் நிகழ்வில் சிவஸ்ரீ யோகருத்திரன் சர்மா குருக்கள், கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் முன்னாள் இயக்குநர் வண பிதா ளு.ஏ.டீ மங்கள ராஜா மற்றும் மௌலவி முகமட் சியாட் ஆகியோர் மும்மத ஆசியுரைகளை வழங்கியதுடன் யாழ். மாவட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிறிதரன் சிவஞானம், கனடாவிலிருந்து பாடசாலை இயக்குநர் யாழினி இராஜகுலசிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றியிருந்தனர். தவிர, சட்டத்தரணி அற்புதன் சரவணபவனின் கவிதை ரஜித் நவநீதனின் பாடலும் இடம்பெற்றிருந்தது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.