புதிய கட்சி பாரதிய ஜனதா கட்சியின் இலங்கை கிளையா?

 


பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் தனது கிளை கட்சியை ஆரம்பித்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சி பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்த நிலையில், அடுத்ததாக இலங்கையில் கட்சி துவங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியானது.

முத்துசாமி என்பவர் தலைமையில், இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் கட்சி ஆரம்பிக்கப்பட்டதாக யாழ்ப்பாணத்தில் வைத்து அறிவித்தார்.

இதையடுத்து இந்த கட்சி இந்திய பாரதிய ஜனதாக் கட்சி கிளை என்று சில தகவல்கள் இந்தியாவில் பரவின.

ஆனால், பெயர் ஒரே மாதிரி இருக்கிறதே தவிர, உண்மையில் இரண்டும் வெவ்வேறு கட்சிகளாகும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.