வேலை நிறுத்த போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு!

 புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளின் போராட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதியன்று நாழு தழுவிய வேலை நிறுத்தத்தை வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

டெல்லி எல்லையருகில் நூறு நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மத்திய அரசுடன் நடத்திய 11 சுற்றுப் பேச்சு வார்த்தைகள் தோல்வியை தழுவவே விவசாயிகள் போராட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  26ம் திகதியன்று காலை முதல் மாலை வரை அமைதியான முறையில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த இருப்பதாக விவசாய சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

28ம் திகதி ஹோலிகா அரக்கியின் தகனம் ஹோலிப் பண்டிகையை ஒட்டி கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் வேளாண் சட்டங்களின் நகல்களைத் தீயிட்டு எரிக்கும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.