கொரோனா நோயாளர்கள் முழுமையான விபரம்!
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 297 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்புக்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 286 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து நேற்று 397 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 958ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், தொற்றுக்கு உள்ளான இன்னும் இரண்டாயிரத்து 803 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அக்கரைப்பற்று, மொரட்டுவ, வத்தளை, றாகம மற்றும் பொல்கஸ்ஓவிட்ட ஆகிய இடங்களிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
மூன்று ஆண்களும் இரு பெகண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இலங்கையில் கொரோனாவினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 525 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை