புர்காவை தடை இனவெறி நிகழ்ச்சி நிரல்!

 புர்காவை தடை செய்ய தீர்மானித்துள்ளதை இனவெறி நிகழ்ச்சி நிரல் என முஸ்லிம் அமைப்பு தெரிவித்துள்ளது.

முஸ்லிம்களிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கின்றோம் என சிங்களவர்களிற்கு வலியுறுத்த அரசாங்கம் விரும்புவதாக இலங்கை முஸ்லிம் சபையின் ஹில்மி அகமட்  சர்லதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

பெண்கள் தங்களிற்கு விருப்பமான உடையை அணிவதற்குள்ள உரிமையாக புர்காவை கருதவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸினால் உயிரிழந்த 350 பேரின் சடலங்களை அவர்களின் மத நம்பிக்கைகளை மீறி அவர்கள் தகனம் செய்தனர். தற்போது அவர்கள் புர்காவையும் மதரசாக்களையும் தடை செய்ய முயல்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மதராசாக்களின் நோக்கத்தை போன்ற நோக்கத்தை கொண்ட பௌத்த கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களிற்கு எதிராக இந்த நடவடிக்கைகளை எடுப்பார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.