யாழில் இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

 சாவகச்சேரி- நுணாவில் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப்பெண் ஒருவர் நேற்றுக் காலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தூக்கில் தொங்கி உயிருக்கு போராடிய யுவதியை அயலவர்கள் மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்த போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்..

இதில் நுணாவில் வைரவர் கோவில் பகுதியைச் சேர்ந்த 22 வயதான குடும்பப் பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நோய்வாய்ப்பட்டிருக்கும் தனது தந்தையை கவனிக்கச் சென்ற சமயம் இவ்வாறு தூக்கிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.