தன்னைப்பற்றி வெளியான செய்திகள் பொய்யானவை!

 முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் கட்சியின் இளைஞரணி பிரமுகரும் சமூக செயற்பாட்டாளருமான பீற்றர் இளஞ்செழியன் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்

அண்மையில் அவரைப் பற்றிய ஊடகங்களில் தவறான செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில் குறிப்பாக அந்தச் செய்தி உண்மைக்கு புறம்பான செய்தி எனவும் அவ்வாறான ஒரு நிலைமை இல்லை எனவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தியில் புதுக்குடியிருப்பு நகரில் உள்ள புத்தகக் கடை ஒன்றில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்திருந்த பீற்றர் இளஞ்செழியன் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் இதுவரை செலுத்தவில்லை எனவும்,

இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த வழக்கு இணக்க சபைக்கு விடப்பட்டது எனவும்,

இணக்க சபைக்கு கடிதம் அனுப்பியும் அவர் வருகை தரவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது

இந்தச் செய்தி முற்றுமுழுதான பொய் எனவும் இந்தக் கடன் தொகையானது ஏற்கனவே செலுத்தபட்டுள்ளதாகவும் இவ்வாறான போலி செய்திகளை வெளியிட்டு தன்னுடைய பெயருக்கும் கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்த நினைப்பதாகவும் இது தொடர்பில் தான் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.