யாழில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவேந்தல்!


 அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 அன்றிலிருந்து 19.03.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதி அம்மா. எம் தேசத்தின் உரிமைக்காக குரல் கொடுப்போரை பாரதம் அன்றும் இன்றும் ஏளனமாகவே பார்த்தது அது எத்தனையோ உயிர்களையும் பறித்தது. உலகிற்கு அகிம்சையை போதித்த நாடு என்று கூறிக்கொண்டு அடாவடித்தனமான செயல்களில் ஈடுபட்ட இந்திய அரசுக்கு எதிராகவும் அதன் அமைதி காக்கும் படைக்கு எதிராக உண்ணா நோன்பிருந்து உயிர் தியாகம் செய்தவர் அன்னைபூபதி....

இன்று அவரின் 33வது வருட நினைவேந்தல்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராஜா கஜேந்திரன், யாழ் மாவட்ட அமைப்பாளா் தீபன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளா்கள் கலந்துகொண்டனா்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.