கொவிட் -19 பாதிப்பைக் கண்டறியும் நவீன பரிசோதனை!


 கொவிட் -19 தொற்றால் எம்மில் பலருக்கும் தசைகளிலும், மூட்டுகளிலும் விவரிக்க முடியாத வலியுடனான பாதிப்பு ஏற்படுகிறது. இதனை ரேடியோலாஜிக்கல் இமேஜிங் பரிசோதனை மூலம் துல்லியமாக அவதானிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

உலகம் முழுவதும் இன்றளவிலும் 13 கோடி மக்களைப் பாதித்து தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோய் தொற்றால் எம்மில் பலருக்கும் பல வகையினதான பின்விளைவுகளும், பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. 

பலருக்கு தசைப் புண்களும், மூட்டு வலிகளும் இதன் காரணமாக ஏற்படுகின்றன. சிலருக்கு முடக்கு வாதம், நோய் எதிர்ப்புத் திறன் குறைவு, COVID TOES எனப்படும் கோவில் கால் விரல் பாதிப்பு போன்ற அறிகுறிகளை இத்தகைய பாதிப்பால் ஏற்பட்டிருக்கிறது.

இந்த  அறிகுறிகள் பலருக்கு கடுமையானதாகவும், சிலருக்கு நாட் பட்டதாகவும் மாறி இருக்கிறது. இதனை Radiological Imaging என்ற தொழில்நுட்பம் மூலம் துல்லியமாக கண்டறிய இயலும்.

covid-19 தொற்று தொடர்பான பரிசோதனைக்கு பிறகு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டவர்கள் அதற்குரிய சிகிச்சையை பெற வேண்டும். அதன்பிறகும் பாதிப்புகளின் பக்க விளைவுகள் குறித்தும், ஏற்படும் அறிகுறிகள் குறித்தும் மருத்துவர்களிடம் விரிவாக எடுத்துரைக்க வேண்டும். 

இதுதொடர்பாக மேற்கண்ட தொழில்நுட்பத்திற்குரிய பரிசோதனைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு பாதிப்பின் தன்மையைப் பொறுத்து சிகிச்சை பெற்று குணமடையலாம்.  நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதிலும், முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுவதிலும் தீவிர கவனத்துடன் இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.