அவுஸ்திரேலியாவில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு!


 வார இறுதியில் அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் பெய்த கனமழையால் சில பகுதிகளில் அரை நூற்றாண்டில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

இதனால் ஆயிரக்கணக்கானவர்களை வெளியேற்றப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதமாகியுள்ளன.

நியூ சவுத் வேல்ஸில் மட்டும், 12 பகுதிகளுக்கு வெள்ள அபாயமும் வெளியேற்றும் எச்சரிக்கைகளும் வெளியிடப்பட்டன. 8 மில்லியன் மக்களுடன் அவுஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இது உள்ளது.

அவுஸ்திரேலிய வானிலை ஆய்வகத்தைச் சேர்ந்த ஜொனாதன் ஹவ், மழை மற்றும் பலத்த காற்று இரண்டுமே பேரழிவை ஏற்படுத்துவதாகவும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் சிட்னியில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஏ.பி.சி. செய்திச் சேவையிடம் கூறியுள்ளார்.

சில பகுதிகளில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழக்கிழமை மழை தொடங்கியதில் இருந்து சுமார் 6,000 அழைப்புகளுக்கு அவசர குழுவினர் பதிலளித்துள்ளனர். இவற்றில் 700 அழைப்புகள் வெள்ளத்திலிருந்து மீட்குமாறும் பாதிக்கப்பட்டோரால் கேட்கப்பட்டுள்ளது.

தற்போது அவுஸ்திரேலிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் வானில‍ை, அந்த முயற்சிகளை முற்றாக பாதிததுள்ளது.

அடுத்த சில நாட்களில் 6 மில்லியன் மக்களுக்கு இந்த தடுப்பூசியை வழங்க நாடு திட்டமிட்டிருந்தது. தற்போதைய அழிவைக் கருத்தில் கொண்டு இது நிறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.