அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க சீனாவுக்கு அதிகாரம் இல்லை!

 


சீனாவில் தயாரிக்கப்பட்ட 600,000 டோஸ் சினோஃபார்ம் தடுப்பூசி ஒரு வார காலப்பகுதியில் பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தரப்பிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இது மக்களுக்கு செலுத்துவதற்காக இலங்கைக்கு அனுப்பப்படும் என்று சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இது ஒரு நன்கொடை என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

எனவே தடுப்பூசிகளை பெறுவதற்கு மக்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோர சீன தரப்புக்கு அதிகாரம் இல்லை. எவ்வாறாயினும், நாட்டில் வாழும் சீன நாட்டினருக்கு தடுப்பூசி போட இலங்கை அரசு முன்வந்துள்ளது என்றார்.

சீன தடுப்பூசிகள் 60 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன. சீனாவில், 75 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இப்போது தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

சினோஃபார்ம் தடுப்பூசி தொடர்பான 3 ஆம் கட்ட சோதனைகள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் இலங்கை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதே ஆவணங்கள் WHO மற்றும் பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.