காடழிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!


 'காடழிப்பிற்கு எதிராக நாம் கொழும்பிற்கு' என்ற தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. காடழிப்பினை தடுக்குமாறு வலியுறுத்தி இவ் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று திங்கட்கிழமை மாலை 3.30 க்கு கொழும்பு - டெக்னிகல் சந்தியில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கொழும்பு , கோட்டை புகையிரத நிலையம் வரை பேரணியாக சென்றனர். ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க , பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய , பொதுச் செயலாளர் டில்வின் சில்வா , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரத்னாநாக்க, நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுனில் ஹந்துனெத்தி மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் உள்ளடங்கலாக பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

காடழிப்பின் மூலம் எதிர்காலத்தில் சுவாசிப்பதற்கு ஒட்சிசன் இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என்பதை வலியுறுத்தும் வகையில் , ஆதிவாசிகளை போன்றும் , மேற்கத்தையோரைப் போலவும் , உள்நாட்டவர்களைப் போலவும் ஆடை அணிந்திருந்தவர்கள் செயற்கை சுசாவ கருவிகளைப் பொறுத்தியவாறு பேரணிக்கு முன் நடந்து சென்றனர்.

அத்தோடு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் உருவப்படம் பதித்த முகமூடியை அணிந்திருந்த சிலர் கைகளில் செடிகளின் படங்களை ஏந்திவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'ஆட்சியாளர்களே சுற்றாடல் அழிப்பினை உடனடியாக நிறுத்துங்கள்' , 'ஆதிவாசிகளும் நீதிமன்றம் செல்கின்றனர்' , 'காடழிப்பதை தடுப்பதற்கு எம்முடன் இணையுங்கள்' , ' சட்டங்களை உருவாக்கி , காடுகளை அழிப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்குகின்றனர்' , 'சிங்கராஜ வன அழிப்பின் பாதிப்பு நாட்டுக்கன்றி வேறு யாருக்கு? ' 'அரசாங்கத்தின் நலன்விரும்பிகளுக்கு முத்துராஜவெல' உள்ளிட்ட வாசனங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு காடழிப்பிற்கு எதிரான கோஷங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.