கந்தளாயில் வயலுக்குச் சென்றவர் மரணம்!


 திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயலுக்குச் சென்ற ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் இன்று (27.03.2021) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேராறு,கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய சேகுஇஸ்மாயில் பைசர் என்பவரே இவ்வாறு வயலுக்குச் சென்ற நிலையில் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் தற்போது வயல் வெளியில் காணப்படுவதோடு,குறித்த மரணம் மாரடைப்பு காரணமாக ஏற்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதாவது விதத்தில் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.