எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 474 கொவிட் நோயாளர்கள்!


 சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட 1200 பி.சி.ஆர். பரிசோதனைகளில் 474 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னதாக மேற்கொள்ளப்பட் விரைவான சீரற்ற ஆன்டிஜன் பரிசோதனைகளின்போது 20 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டது.

அதைத் தொடர்ந்தே 1200 ஊழியர்களிடத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.