கொரோனாவால் 5 பேர் உயிரிழப்பு !


 இலங்கையில், இறுதியாக 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் இலங்கையில், உயிரிழந்தோரின்  எண்ணிக்கை 551 ஆக அதிகரித்துள்ளது.

அந்தவகையில் இறுதியாக உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேஉட பகுதியைச் சேர்ந்த 78 வயதான ஆண்ணொருவர், குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.நுகதலாவ பகுதியைச் சேர்ந்த 78 வயதான ஆண்ணொருவர், தெல்தெனிய வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

மேலும், கடவத்த பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆண்ணொருவர், மினுவாங்கொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஆண்ணொருவர், ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். காலி பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஆண்ணொருவர், கராபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 16ம் திகதி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இன்றையதினம் இரவு 9.30 மணி வரை 274 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் இதுவரை 90,375 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.