இந்தியாவில் ஒரே நாளில் 68,020 பேருக்குக் கொரோனா!


 கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 68,020 புதிய கொரோனா வைரஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை தெரிவித்துள்ளது. 

2020 ஒக்டோபர் 11 ஆம் திகதிக்குப் பின்னர் அதிகளவான கொரோனா நோயாளர்கள் ஒரே நாளில் அடையாளம் காணப்பட்டமை இது முதல் சந்தர்ப்பமாகும். 

அமெரிக்கா, பிரேஸிலை தொடர்ந்து அதிகளவான கொரோனா நோயாளர்களை கொண்டுள்ள மூன்றாவது நாடாக தற்சமயம் இந்தியா உள்ளது.

இந்தியாவில் ஒடுமொத்தமாக 12.4 மில்லியன் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, 

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 68,020 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் 291 பேர் உயிரிழந்தனர். தற்போது நாடு முழுவதும் 35,498 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 1.4 கோடி பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

2020 ஜனவரி தொடங்கி தற்போது வரை 1,61,843 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் 40,144 பேருக்குக் கொரோனா உறுதியாகியுள்ளது. 108 பேர் உயிரிழந்தனர். அங்கு பல இடங்களில் இரவு நேர ஊரடங்கு அமுலில் உள்ளது.

அதேபோல் டெல்லி மாநில அரசும் திருமணம், இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் மக்கள் அதிகம் கூட கெடுபிடி விதித்துள்ளது.

மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது.

சட்டமன்ற தேர்தல் நடைபெறும் கேரளா, மேற்குவங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்கள் முழுவீச்சில் நடைபெறுவதால் கொரோனா இரண்டாம் அலை அச்சம் அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.