90 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்கள்!


 நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 90 000 ஐ கடந்துள்ளதுடன் இன்றையதினம் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று  ஞாயிறுக்கிழமை இரவு 8 மணி வரை 177 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 90 023 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில்  86 759 பேர் குணமடைந்துள்ளதோடு , 2719 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை இன்று காலை வரை 8, 24 523 பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை பூவெலிகட பிரதேசத்தை சேர்ந்த 85 வயதுடைய ஆணொருவர் கண்டி தனியார் வைத்தியசாலையில் கடந்த 14 ஆம் திகதி கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு கொரோனா மரணம் பதிவாகியது. அதற்கமைய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 546 ஆக அதிகரித்துள்ளது.

மெதகிரிய பிரதேசத்தை சேர்ந்த 64 வயதுடைய பெண்ணொருவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் கடந்த 19 ஆம் திகதி கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.