பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்விக்கு கொரோனா

 


உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பாகிஸ்தான் தற்போது 31-வது இடத்தில் உள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.50 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானின் ஜனாதிபதியாக இருந்து வருபவர் ஆரிப் ஆல்வி. இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக ஆரிப் ஆல்வி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவர் மீதும் அல்லாஹ் இரக்கம் காட்டட்டும். தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்து கொண்டேன்.

ஆனால், 2வது டோஸ் செலுத்திக் கொண்ட பின்னரே ஆன்டிபாடிகள் வளர்ச்சி பெற தொடங்கும். அது இன்னும் ஒரு வாரத்தில் செலுத்த உள்ளேன். தொடர்ந்து கவனமுடன் இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.