அதி அவதானமிக்க வலயங்களுக்கு தடுப்பூசி!

 உலக சுகாதார அமைப்பால் கொவெக்ஸ் வசதியின் கீழ் யுனிசெப் நிறுவனத்தின் ஊடாக நாட்டுக்கு வழங்கப்பட்ட முதலாவது கொவிட்19 தடுப்பூசி தொகை, அதிக அவதானமிக்க


வலயங்களில் வாழும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்று(08) முதல் செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று முன் தினம் நள்ளிரவு எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் கொண்ட விசேட விமானம் ஊடாக 2 இலட்சத்து 64 ஆயிரம் கொவிட்-19 தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

கொவேக்ஸ் வேலைத்திட்டத்தின் கீழ் 1.44 மில்லியன் கொவிட்19 தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதுடன் அதில் முதலாவது தொகுதியே இவ்வாறு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.