கொரோனா சடலங்களை குப்பியாவத்தை முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரி கடிதம்!


கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை குப்பியாவத்தை முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  அசேல குணவர்தனவிற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடித்ததை அனுப்பியுள்ள மருதானை மசூதியின் நிர்வாகத்தினர், கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதாக அரசாங்கம் அறிவித்திருப்பதானது நடைமுறை சாத்தியமல்ல என சுட்டிக்காட்டியுள்ளனர்.

தெமட்டகொட – குப்பியாவத்தை மயானம் கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கு தகுந்த இடமாகும் என்று பேராதனை பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ளதாக குறித்த கடிதத்தில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குப்பியாவத்தை மயானத்தில் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டால், அடக்கம் செய்யும்போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் என்பதையும் அறங்காவலர்கள் அந்தக் கடிதத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள இலங்கை இஸ்லாமிய மையத்தின் தலைவர் மொஹமட் உசைன்,  இந்த விடயம் குறித்து தேவைப்பட்டால் உலக முஸ்லிம் சபைக்கும் சென்று பொருத்தமான நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் குப்பியாவத்தை மயானம் குறித்து பேராதெனிய பல்கலைக்கழகம் நடத்திய நிலத்தடி நீர் நிலை அறிக்கை எந்த உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களிலும் தாக்கல் செய்யப்படவில்லை என்பது ஏமாற்றமளிப்பதாகவும் தாங்கள் இந்த விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம், ஆனால் மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திடம் முறையிடுகிறோம் என கூறியுள்ளார்.

இதேநேரம், குறித்த கடிதம் இந்தவாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.