இலங்கை தண்டிக்கப்பட முன் பிரித்தானியா குற்றவாளிக்கூண்டில் நிற்கவேண்டி ஏற்படும்!

 


பிரித்தானிய அரசின் பொறுப்புக்கூறலானது ஈழத்தமிழர்கள் விடயத்தில் நிகழுமானால், இனப்படுகொலையைச் செய்த இலங்கை தண்டிக்கப்பட முன் பிரித்தானியா குற்றவாளிக்கூண்டில் நிற்கவேண்டி ஏற்படும்.

அது ஓர் புறமிருக்கட்டும்.
ஈராக்கின் மீது பிரித்தானிய அரசு நிகழ்த்திய வன்முறையை வெளிக்கொணர்ந்த, பிரித்தானிய உயிரியல் ஆயுத விவகார நிபுணர் டேவிட் கெலி (59) திடீரென்று (2003 இல்) உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். காரணம் மிகச் சாதாரணமானது.
ஈராக் மீது போரைத்திணிப்பதற்காக, அந்நாடு பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாக பிரித்தானிய அரசு மிகைப்படுத்திப் பொய் கூறியதாக BBC தெரிவித்தது. இந்தச் செய்திகள் தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றம் BBC இன் மீது குறுக்கு விசாரணை நடாத்தியது. இந்தவிசாரணையின் முடிவில் டேவிட் கெலி அவர்களே BBC க்குத் தகவல் கொடுத்தார் என்பது தெரியவர நாடாளுமன்றக்குழு அவர் மீது விசாரணை நடாத்தியது. விசாரணை நடந்து சில நாட்களின் பின் கைமணிக்கட்டில் உள்ள நரம்பு அறுக்கப்பட்ட நிலையில் கெலி இறந்து கிடந்தார். கெலி யாரால் கொல்லப்பட்டிருப்பார் என்பது குழந்தைக்கும் தெரியும்.
இப்போது விடயத்திற்கு வருவோம். ஈராக் விடயத்தில் தனது குட்டு வெளிப்படவிருந்த நேரத்தில், தனது நாட்டுக் குடிமகனென்றும் பாராமல் நிபுணர் கெலி அவர்களைக் கொலை செய்த பிரித்தானியா, இலங்கை இனப்படுகொலையில் தனது பங்கு முதன்மையாக இருப்பதை வெளிக்கொணரக்கூடிய பொறிமுறையைக் கேட்கும் எவரையும், சுதந்திரமாக நடமாட அனுமதிக்குமா ? அல்லது அவர்களது செயற்பாடுகளை இலகுவாக அனுமதிக்குமா ?
"அம்பிகை அம்மாவின் வேண்டுகோளை பிரித்தானியா ஏற்றுக்கொண்டுவிட்டது" என்று நேற்றுமுன்தினம் சொல்லப்பட்டபோது எனக்கு கெலியின் சாவுதான் நினைவுக்கு வந்தது.
-தேவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.