நானே காணி ஆவணங்கள் மீள கொண்டு வரப்பட்டமைக்கு காரணம்!


வடக்கு காணி ஆவணங்கள் மீள கொண்டு வரப்பட்டமைக்கு தானே காரணமென அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரசின் பங்காளரான அங்கஜன் இராமநாதன், சிறுபான்மையினர் மீதான எந்த நெருக்கடிக்கு எதிராகவும் இதுவரை குரல் கொடுத்ததில்லை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மாறாக, அரசின் பங்காளியாக இருந்தாலும், டக்ளஸ் தேவானந்தா பல விடயங்களில் பகிரங்கமாக குரல் கொடுத்து வருகிறார்.

வடக்கு காணி ஆவணங்களை மீள கொண்டு வர வைப்பதில் தானே செயற்பட்டதாக, நேற்று வட்டுக்கோட்டையில் நடந்த நிகழ்வில் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் பிரதிநிதிகள் பகிரங்கமாகவும், தனிப்பட்ட முறையிலும் செயற்பட்டமை, தமிழ் மக்களின் பகிரங்க எதிர்ப்பு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலையிட்டமை என பல காரணங்களினால் ஆவணங்களை மீள வடக்கிற்கு அனுப்ப எடுத்த முடிவை, அமைச்சர் மஹிந்தானந்த மூலம் அரசாங்கம் செயற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், காணி ஆவணம் மீள கொண்டு வரப்பட்டதும் அங்கஜன், உரிமை கோரியுள்ளார்.

இதேவேளை கடந்த பொதுத்தேர்தல் சமயத்தில், நிதி ஒதுக்கப்படாத வீதிகளில் கூட புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டதாக கூறி அடிக்கல் நாட்டியதாக அங்கஜன் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.