உறுதியான தலைக்கவசம் அவசியம்!


சர்வதேச பாவனையாளர் உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்வகையில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றது.

இதன்போது இருசக்கர வாகனத்தினை (மோட்டார் சைக்கிள்) செலுத்தும் போது தரமான ( SLS தரசான்றிதழ் பெற்ற) தலைக்கவசங்களை பயன்படுத்துவதன் அவசியம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தின் நகர் பகுதியில் இது தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய துண்டுப்பிரதிகள் விநியோகிக்கப்பட்டதுடன், போக்குவரத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மோட்டார் சைக்கிளில் பயணிப்போருக்கு இவ்விடயம் தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கப்பட்டது. தலைக்கவச விற்பனை நிலையங்கள் மற்றும் விற்பனை முகவர்களுக்கும் போதுமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த பாவானையாளர் அதிகாரசபையின் வவுனியாமாவட்ட பொறுப்பதிகாரி நிலாந்தன்… 2015 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் திகதிய 1923/65 ஆம் இலக்க அரசாங்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பாதுகாப்பு தலைக்கவச தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர், அல்லது வியாபாரிகளும் தலைக்கவசம் தொடர்பான இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட உரிய -SLS உற்பத்தி சான்றுப்படுத்தல் குறியீட்டினை கொண்ட தலைக்கவசங்களையே கட்டாயமாக விநியோகிக்கவும் விற்பனை செய்யவும், காட்சிப்படுத்தவும் முடியும்.

எனவே பொதுமக்களும் அனுமதிக்கப்பட்ட தலைக்கவசங்களை அணிவதை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதை மையமாக கொண்டு இவ்வருட பாவனையாளர் உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. தலைக்கவசம் ஒரு உயிர் கவசம் என்ற வகையில் அனுமதிக்கப்பட்ட தலைக்கவசங்களை பயன்படுத்துவதன் மூலம் ஏதேனும் விபத்துகள் இடம்பெற்றாலும் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை கட்டுப்படுத்த முடியும்.

முக்கியமாக SLS பெற்ற அங்கீகரிக்கப்பட்ட தலைக்கவசம் உறுதியானது மாத்திரமின்றி அதிர்வுகளை தாங்கக்கூடிய விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களும் பொறுப்புடன் நடந்து கொள்வது வரவேற்கத்தக்கது” என்றார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.