அதிமுக குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தும்!
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்துவதில் இருந்து அ.தி.மு.க. ஒருபோதும் பின்வாங்காது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 7 ஆவது முறையாக போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் தி.மு.க நாடகமாடியதாக குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்துவதில் இருந்து அ.தி.மு.க. ஒருபோதும் பின்வாங்காது என குறிப்பிட்டார்.
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சத்தை திரும்பப்பெற கூறுவோம் தமிழக பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை