மகாராஷ்ட்ராவில் அமுல்படுத்தப்பட்டது இரவு நேர ஊரடங்கு!


மகாராஷ்ட்ராவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் இரவு நேர ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள உணவகங்கள், திரையரங்குகள் மற்றும் கடைகள் ஆகியவற்றை நேற்று இரவு 8 மணிக்கே மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு விடுத்திருந்தார்.

அதாவது இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை 5 பேருக்கு அதிகமாக ஒன்றுக்கூட கூடாது, பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம், முகக்கவசம் அணியாதவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம், அனைத்து  அரசியல் கலாசார நிகழ்சிகள் மற்றும் கூட்டங்கள் ரத்து உள்ளிட்ட  ஊரடங்கு கால வழிகாட்டல்களை மகாராஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது.

மேலும் மகாராஷ்ட்ராவில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், ஒரே நாளில் கொரொனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.