ஆபத்தில் சிக்கியுள்ள யாழ்ப்பாணம்!


யாழ்ப்பாணத்தில் இன்றைய தினமும் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி இன்று மட்டும் 11 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் சிறையில் இருந்து விடுதலையான 3 பேருக்கும், பருத்தித்துறை மற்றும் யாழ் மாநகர பகுதியில் தலா மூவருக்கும், சங்கானையில் 4 பேருக்கும், அச்சுவேலியில் ஒருவருக்கும் என யாழ்ப்பாணத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அபாயம் தொடர்ந்தும் நிலவுவதால் மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியமென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.