யாழின் முக்கிய பிரதேசம் முற்றாக முடக்கம்!


கொரோனா அச்சம் காரணமாக யாழ்.திருநெல்வேலி வடக்கு பாற்பண்ணை பகுதி முடக்கப்பட்டிருக்கும் நிலையில் அப்பகுதி மக்களின் தேவைகள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாக நல்லுார் பிரதேச செயலக தகவல்கள் தொிவிக்கின்றன.

குறித்த பகுதியில் சுமார் 800 குடும்பங்கள் வரையில் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் அண்ணளவாக 300 குடும்பங்களுக்கு அவசரமான உதவி தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளியிலிருந்து நன்கொடைகளை, உதவிகளை வழங்க விரும்புபவர்கள் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு அவற்றை வழங்கலாம் எனவும் கோரப்பட்டுள்ளது.

மேலும் முடக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் 6 வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இதர தேவை மதிப்பீடுகளை பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகின்றதாகவும் பிரதேச செயலக அதிகாரிகள் கூறுகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.