மன்னாரில் தொல்லியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு!


மன்னார் மாவட்ட நீதிமன்றம் மற்றும் பள்ளிவாசல், வீடுகள், பொலிஸ் நிலையம், சிறைச்சாலை உள்ளிட்ட பல கட்டுமானங்களை அகற்றுமாறு தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் மாவட்ட நிவாகம் திகைப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், சுற்றுலா அதிகார சபை அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், பொலிசார் அடங்கிய குழு கடந்த புதன் கிழமை மன்னார் பகுதியில் உள்ள கோட்டை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளை சுற்றுலா தலமாக மாற்றுவது தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மன்னார் கோட்டை தொல்லியல் அடையாளமாக 1983ஆம் ஆண்டே அரச இதழ் வெளியிடப்பட்டு விட்டது.

இவ்வாறு அரச இதழ் வெளியிடப்படும் சமயம் கோட்டையில் இருந்து 400 மீற்றர் தூரம் வரையில் திணைக்களத்தின் ஆளுகைப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பு வெளியான பின்பு அப் பிரதேசத்தில் பல வீடுகளும் திணைக்களங்களும் அமைக்கப்பட்டுள்ளபோதும் திணைக்களத்திடம் எந்தவொரு அனுமதியும் பெறப்படவில்லை என கூறப்படுகின்றது.

எனவே இந்த 400 மீற்றர் பரப்பை தற்போது 3 வலயங்களாக பிரித்து பார்க்கின்றோம். அதாவது 70 மீற்றர் முதலாவது வலயமாகவும், 150 மீற்றர் வரையில் 2ஆம் வலயமாகவும் பிரிக்கப்பட்டதோடு எஞ்சிய பகுதி 3ஆம் வலயமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் முதலாம் வலயத்திற்குள் வரும் கட்டுமானமங்கள் முழுமையாக அகற்றப்பட்டே ஆகவேண்டும் என்றும், 2ஆம், 3ஆம் வலயங்கள் கோட்டைப் பக்கம் முதல்பக்கம் அகற்றித் தர வேண்டும் எனவும் தொல்லியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதன்போது முதலாவது வலத்திற்குள் குறிப்பாக 40 மீற்றர் தூரத்திலேயே பொலிஸ் நிலையம் இருப்பதோடு முதலாவது வலயத்திற்குள் சிறைச்சாலை, பள்ளிவாசல் உட்பட 8 வீடுகளும் அகற்ற வேண்டும் எனத் தெரிவித்ததோடு இரண்டாம் வலயமும் அதன் அண்டிய பகுதியிலும் சுற்றுலாத் தளம் அமைந்த பகுதிகள் இவ்வாறே அகற்றப்படவேண்டும் எனவும் கூறியுள்ளது.

இதன் காரணமாக வீடுகள் தப்பித்தாலும் நீதிமன்றக் கட்டிடமும் அகற்றப்பட வேண்டும் என குறித்த திணைக்களம் கோரிய நிலையில், அதிகாரிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணத்தில் அதிக இடங்களை உரிமை கோரும் தொல்லியல் திணைக்களம் அது தொடர்பில் தமது சட்டத்தை மீறியதாக நீதிமன்றங்களை நாடியபோதும், தற்போது முதல் தடவையாக வடக்கு, கிழக்கு மாகாணத்தில் ஒரு நீதிமன்றத்தினையும் உரிமை கோருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.