ஆயரின் பொறுப்பில் பசறை விபத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகள்!!

 


பசறை 13ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் தாய் தந்தையரை இழந்த மூன்று பிள்ளைகளையும் குடும்பத்தாரின் விருப்பத்தின்பேரில் பதுளை கத்தோலிக்க மறைமாவட்ட மேதகு வணக்கத்துக்குரிய ஆயர் வின்சன் பெர்ணாண்டோ அடிகளார் பொறுப்பேற்றுள்ளதாக அப் பிள்ளைகளின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி ஈயூனியா (09 வயது), ஆரோன் (08 வயது) இவாஞ்சலினா (04) ஆகிய மூன்று பிள்ளைகளுமே ஆயரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக அறியகிடைத்துள்ளது.

ஏற்கனவே வைத்தியர் ஒருவர் மூன்று பிள்ளைகளையும் தத்தெடுத்து வளர்க்கவுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் நேற்று பதுளை மாவட்ட கத்தோலிக்க மறைமாவட்ட ஆயரினால் பிள்ளைகள் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தமது தாத்தா ( செபஸ்டியன் பெனடிக் (70 வயது ), பாட்டி ஐயாசாமி செல்வநாயகி (63) ஆகியோரின் அரவணைப்பில் அமர்த்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளனர்.

அத்துடன் குடும்பத்திற்கான அத்தியாவசிய தேவைகள் பதுளை மறைமாவட்ட மேதகு ஆயரின் ஆதரவில் லுணுகல புனித லூர்து அன்னை ஆலய பங்குதந்தையூடாக முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் முழுகவனமும் ஆயரினால் கண்காணிக்கப்படவுள்ளது.

பிள்ளைகளான ஈயூனியா நான்காம் தரத்திலும், ஆரோன்  மூன்றாம் தரத்திலும் லுணுகல இராமகிருஸ்ணா இந்து கல்லூரியில் கல்வி கற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கும் குடும்ப வாழ்வாதார தேவைகளுக்கும் உதவுவதற்கு முன்வருவோர் ஆயரினால் மேற்கொள்ளப்படவிருக்கும் அறக்கட்டளை நிதியத்தினூடாக உதவ முடியும்.

கடந்த 20 ஆம் திகதி பசறையில் நிகழ்ந்த விபத்தில் அந்தோனி நோவா – பெனடிக் மெடோனா தம்பதியினர் உள்ளடங்ளாக 14 பேர் உயிரிழந்தமை முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.