ராஜித – சத்துர CCD இற்கு அழைப்பு!

 


ஊடகவியலாளர் ஒருவரை கடத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்த போலியான முறைப்பாடு தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகனான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன ஆகியோரிடம் கொழும்பு குற்றவியல் பிரிவில் (CCD) இன்று வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

இதற்காக இன்று பிற்பகல் 3 மணியளவில் கொழும்பு குற்றவியல் பிரிவில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழுவொன்றினால் தாம் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறி ஊடகவியலாளர் என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ள சுஜீவ கமகே எனப்படும் 62 வயதான ஒருவர், கடந்த 10 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்தியசாலையிலுள்ள காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

எனினும், தாம் கடத்தப்படவில்லை எனவும், அன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவையும், அவரது புதல்வரான சத்துர சேனாரத்னவையும் சந்தித்துள்ளதாகவும், பின்னர் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இது குறித்து, ராஜித சேனாரத்ன மற்றும் அவரது புதல்வரான சத்துர சேனாரத்ன ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.