பாடசாலை மாணவன் மாயம்!


இரத்மலானையில் காணாமல் போன பாடசாலை மாணவனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதற்காக பொலிஸ் குழுக்கள் 04 நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பம்பலபிட்டி- புனித அந்தோனியார் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இரத்மலானை- தஹம் மாவத்தையில் வசிக்கும் எல்டன் டெவொன் கெனி எனும் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த மாணவன், கடந்த 18ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் , இன்னும் வீடு திரும்பவில்லை என மாணவனின் தாயார் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் காலை 6.30 மணியளவில், மாணவன் சாதாரண ஆடையில் மொரட்டுவை நோக்கிப் பயணிக்கும் காட்சிகள், சி.சி.ரி.வியில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் மாணவன் தொடர்பாக தகவல் கிடைத்தால் 077 377 9850 என்ற இலக்கத்துக்கு அழைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.