துப்பாக்கிகளின் அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கான காலம் நீடிப்பு!


துப்பாக்கிகளின் அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கென வழங்கப்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்திற்கான பாதுகாப்பு அமைச்சு மற்றும் மாவட்ட செயலகங்களினூடாக முன்னெடுக்கப்படும் சகல துப்பாக்கிகளுக்கான புதுப்பிக்கும் நடவடிக்கைகளும் கடந்த 28 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

எனினும் மே மாதம் 31ம் திகதி வரை துப்பாக்கிகளுக்காக அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்த முடியுமென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் புதிய பதிவு நடவடிக்கைகளை எவ்வித கட்டணமும் இன்றி முன்னெடுக்க முடியுமெனவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.